பாரேதான் மலைதனிலே சுற்றும்போது பாங்கான பாறையின்தன் வெப்புதன்னில் நேரேதான் விளைந்திருக்கும் சிவந்தமூலி நெடிதான கொடிவேலி யென்னலாகும் சீரேதான் கொடிவேலி தனையெடுத்து சிறப்புடனே சூதமதை யெடுத்துமைந்தா வீரேதான் வீரமது களஞ்சிகூட்டி நீதியுடன் மத்தித்து ரவியிற்போடே |