தாக்கான லிங்கமதை யெடுத்துபாலா தண்மையுடன் ஆராதாரச்சரக்காம் போக்கான சரக்கதுவும் ஏதென்றாக்கால் பொங்கமுடன் துருசு வெடியுப்புக்காரம் நோக்கான சாரமுடன் சீனந்தானும் நுண்மையுள்ள கரியுப்பு கூடச்சேர்த்து வாக்கதுவும் பிசகாத வண்ணமப்பா வளமையுடன் தீராஞ் செயநீர்தானே |