தானான மனோன்மணியாள் கிருபையாலும் தாக்கான காலாங்கிக் கடாட்சத்தாலும் தேனான முப்பூவின் வளமைதன்னை தேற்றமுடன் வெளியாங்க மாகச்சொல்வேன் பானான முப்பூவை யெடுக்குமார்க்கம் பாலகனே முறைபாடு வழிபாடாகும் மானான பங்குனியாம் பருவந்தன்னில் மார்க்கமுடன் அமாவாசை பருவந்தானே |