சாபமா மின்னமொரு மார்க்கங்கேளு தப்பாது காலாங்கி வாக்குதானும் பாபமது நேராது புண்யவானே பாருலகில் சித்துமுனி சொல்லார்தாமும் கோபமது கொண்டல்லோ முனிவர்தாமும் கூறாரே சிவமுப்பு சூட்சந்தன்னை தாபமுடன் மனோன்மணியாள் கடாட்சத்தாலே சாங்கமுடன் அடியேனும் நவின்றிட்டேனே |