மடிந்தாரே வையகத்து மாண்பரெல்லாம் மகதேவர் கடவுளது யேமவித்தை கடிந்ததொரு பொருளறிய மாட்டாமற்றான் காசினியில் வெகுமாண்பர் மாண்டாரப்பா முடிந்ததொரு சிவானந்தப் பொருளைக்காண மூதுலகில் யாராலுங் கிட்டுமோசொல் படிந்தபொருள் முப்பூவின் நிதானமார்க்கம் பாருலகில் விதியாளி யறிவான்பாரே |