இல்லையே வெகுபேர்கள் மாண்பரப்பா யெழிலான சாத்திரத்தைப் பாராமற்றான் அல்லல்படுந் துயரமது வருமையாலே வன்புடனே பூநீரை எடுப்பதற்கு தொல்லையெனும் சாத்திரத்தை முன்பின்னாக சோராமல் பாடிவைத்தார் சித்தர்யாவும் கல்லுதெடீநுவம் பேசுமென்று கையெடுத்து காசினியில் கையுரைத்த காட்சியாமே |