| திகைத்துமே சிவமாண்பர் இருவர்தாமும் தீர்க்கமுடன் மனஞ்சோர்ந்து நிற்கும்போது புகைபடர்ந்த வனந்தனிலே சர்ப்பந்தானும் புகட்சியுடன் முன்னிறந்த சர்ப்பங்கூட்டி பகைபோன்ற சிவமாண்பர் இருவர்காண பாங்குடனே கானகத்தைச் சென்றவண்ணம் தகமையுடன் சர்ப்பமது கொண்டுசெல்ல தாட்சியுடன் சிலமாண்பர் பார்த்திட்டாரே |