பார்த்துமே சர்ப்பமது சென்றுதென்று பாங்குடனே சிவமாண்பர் இருவர்தாமும் நேர்த்தியுள்ள மூலிகைதான் என்றறிந்து நேர்மையுடன் சிவமாண்பர் மனதிலெண்ணி பூர்த்தியுட னிருக்கப் பயந்தானுண்டோ புகழான வடிவார மரத்திற்றானும் கார்த்தருந்து மூலிதனைக் கையிற்றானும் கவனமுடன் எடுத்துவர நண்ணினாரே |