பார்த்தேனே புவனகிரி சிகரந்தன்னில் பாங்கான செந்தேளின் கொடூரந்தன்னை தீர்த்தமுடன் சிகரம்விட்டு மேலேநோக்கி திகழான கொடிமுனையைப் பற்றிநின்று வேர்த்துடலும் விஷமதுவும் தலைகொண்டேறி மிக்கான சிகரமென்ற செம்புதன்னை ஆர்த்துமே தானோக்கி கொட்டும்போது வழகான செம்பதுவும் உருகிப்போச்சே |