சித்தான சித்துமுனி ரிஷிகளெல்லாம் தேசமதில் பலபலவாடீநு நூல்கள்கூறி முத்தான பாஷாண கற்பஞ்சொல்ல மூதுலகில் மறைத்துவைத்தார் சித்தரெல்லாம் சத்தசாகரங்கடந்து குளிகைபூண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று புத்தியுடன் காலாங்கி தாள்பணிந்து புகழான கற்பமதைக் கூறிட்டேனே |