இறங்கியே போகரிஷி முனிவர்தானும் யெழிலான செம்புரவி யருகில்வந்து திறமுடனே குளிகையது விட்டுமல்லோ தீர்க்கமுடன் அஞ்சலித்து கரங்குவித்து நிறமுடைய செம்புரவி தன்னைக்கண்டு நிட்களங்கமான பரவசமுங்கொண்டு குறவனைப்போல் சித்துமுனி ரிஷியார்தாமும் கும்பிட்டு முடிவணங்கி பணிந்திட்டாரே |