கேட்கவே போகரிஷி முனிவர்தானும் கெடியான லோகாதிதேசமெல்லாம் மீட்கமுடன் குளிகைகொண்டு சுத்திவந்தேன் மிக்கான பதிதனையே காணவென்று வாட்டமுடன் தெரிசனைக்கு வந்தேன்யானும் வளமான காலாங்கி கடாட்சத்தாலே தேட்டமுடன் எந்தனுக்கு தெரிசனைத்தான் தேவனே கிடைத்துதென்று பணிந்திட்டாரே |