செப்பவென்றால் வெடியுப்பை விட்டாலல்லோ செம்மலுடன் பூவுமில்லை காயுமில்லை அப்பினால் உப்பதனைக் கட்டலாகும் ஆகாகா நாதாக்கள் சிடிகைவேதை ஒப்பமுடன் சிடிகையென்ற வுப்புதன்னை ஓகோகோ நாதாக்கள் மறைத்துவைத்தார் தப்பிதங்கள் நேராது வுப்பின்மார்க்கம் தண்மையுள்ள மன்னவனே சாற்றக்கேளே |