சித்தான சித்துமுனி இந்தமார்க்கம் சிறப்புடனே சாத்திரத்தில் சொல்லவில்லை முத்தான நூலெல்லாம் அனேகங்கண்டேன் முனையான பஞ்சபூத பேதந்தன்னை சத்தேனும் மாண்பர்களும் பிழைப்பதற்கு தயவுவைத்து யாரேனுங் கூறவில்லை முத்திபெற சாத்திரங்கள் கோடாகோடி மூதுலகில் சொன்னவர்கள் கோடியுண்டே |