நிற்கவென்றால் உந்தமக்கு எல்லாங்கிட்டும் நீதியுடன் சூதமென்ற குளிகைதன்னால் அற்பமென்று நினையாதே யருண்மைந்தாகேள் ஆகாகா விதியிருந்து கிட்டலாச்சு சொற்பமெனும் கருமியென்ற மாண்பர்தம்மை சுட்டறுத்து விட்டகற்றி துகளகற்றி கற்புடைய மாயவலைச் சிக்கறுத்து களங்கமில்லா சிவயோக தவத்தைப்போற்றே |