பார்க்கவென்றால் அறுபத்து நான்குசித்தும் பாருலகில் வெகுகூத்துவாடலாகும் தீர்க்கமுடன் ஆவினது முதுகில்வைத்தால் திறமான பசுவதுவும் பால்கொடாது ஏர்க்கவே குளிகையது வேகத்தாலே யெளிதான பாலதுவும் மேலேநோக்கும் ஆர்க்கமுடன் மணியதுவை எடுத்தாலல்லோ வப்பனே பாலதுவுங் கறக்கும்பாரே |