சொல்லவென்றால் புலிப்பாணி சொகுசுள்ளானே சுந்தரனே இந்திரனே சுகுணமாரா புல்லறிவால் உந்தனுக்குப் புகட்டுவோம்யாம் புகழான செம்பினிட சுத்திதன்னை வெல்லவே செம்பதுவும் பலமொன்றாகும் வேகமுள்ள வீரமது பலமொன்றாகும் சொல்லவே காரமது பலமொன்றாகும் செயலான நிமிளையது பலமொன்றாமே |