போமேதான் வாயுவென்ற ரோகம்போகும் பொல்லாத பீலிகையும் மகோதரம்போம் ஆமேதான் கெவுசியென்ற கெண்டைபோகும் வப்பனே விக்கலென்ற வுளமாந்தைபோகும் நாமேதான் சொன்னபடி வயிற்றுவலிபோகும் நலமான சோகையொடு பிரமேகம்போம் வேமேதான் மேகமது இருபதுவும்போகும் வேகமுடன் விஷபாகந் தீருந்தானே |