பலிக்குமே சூதமுண்ட மாண்பரெல்லாம் பாருலகில் மகானுபானென்பார்பாரு ஜொலிக்குமே தேகமது கற்றூணாகும் சோராது வாசியது மேல்நோக்காது சுலிக்காது இருகண்ணும் வருந்தியுந்தோன்றும் காசினியில் வேசியாக மாண்பரென்பர் சலிக்காது சண்டரச பற்பமப்பா சட்டமுடன் செடீநுவேனே யோகிபாரே |