வேதையாம் வேதைமுகம் பஞ்சபூதம் மேன்மையுள்ள செந்தூரம் காயகற்பம் கோதையெனும் மனோன்மணியாள் கடாட்சத்தாலும் கொற்றவனார் நாதாக்கள் பாதத்தாலும் பாதையெனும் பஞ்சபூத செந்தூரத்தை பாருலகில் மாணாக்கர் பிழைப்பதற்கும் சூதையது கூறாமல் குமாரவேலா சுந்தரனே கைபாகஞ்செப்புவேனே |