மருட்டான சிடிகையென்ற வேதைதன்னை மார்க்கமுடன் அறியாமல் மாண்பர்தாமும் இருட்டுவழி யேகியல்லோ பாலரெல்லாம் எழிலான கைமுறையை பாராமற்றான் பொருளிருக்கு மிடமதுவும் தோன்றாவண்ணம் பொங்கமுடன் மதியீன மயக்கத்தாலே குருட்டுவிழிப் பூனையது விட்டம்பாடீநுந்த குறிப்பான கதைபோலே மேவலாச்சே |