| பாரேதான் வாரடித்துப் புடந்தான்போடு பாதகாண வெள்ளியது செம்பினாலே நேரேதான் மாற்றதுவும் அதிகங்காணும் நேர்மையுள்ள பிறவியென்ற தங்கமாச்சு சீரேதான் இத்தங்கம் சிவயோகத்தங்கம் சிறப்பான மாண்பர்களுக் குகந்ததங்கம் ஆரோதான் சொல்வாரோ யுந்தமக்கு வப்பனே யானுரைத்தேன் உண்மைபாரே |