எடுக்கவே பூரமது என்னசொல்வேன் எழிலான தந்தமது போலேகாணும் ஒடுக்கமதாடீநு இருகியல்லோ யிறுகிக்காட்டும் வுத்தமனே தவளைநிறம்போலேகாணும் தொடுக்கவே வெடியுப்பு பலமொன்றாகும் தோறாமல் சீனமது பலமொன்றாகும் விடுத்ததொரு துருசதுவும் பலமொன்றாகும் வித்தகனே சிங்கியது பலமொன்றாமே |