இருந்தேனே நெடுங்காலங் குளிகைகொண்டு எழிலான சமாதிமுகம் எல்லாங்கண்டு பொருந்தவே யுந்தமக்கு உபதேசங்கள் பொங்கமுடன் கொட்டிவைத்தேன் இடங்கொள்ளாது திருந்தவே பூரமென்ற காயகற்பம் திட்டமுடன் குன்றிவீதங் கொண்டாயானால் அருந்தியதோர் தேகமது ஜோதிமின்னும் வப்பனே பூரமதின் வேகந்தானே |