தங்கமாம் சுயத்தங்கம் பிறவித்தங்கம் தாரணியில் நாதாக்கள் மெச்சுந்தங்கம் புங்கசித்திக் குகந்ததொரு யோகத்தங்கம் புகழான சமுசாரிக்கான தங்கம் வங்கமதற் கசையாத வலுத்ததங்கம் வளம்பெரிய சித்துமுனி போற்றுந்தங்கம் இங்கிதமாம் மாண்பர்களுக்குகந்த தங்கம் எழிலான நடராஜ தங்கம்பாரே |