பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாலகனே யின்னமொரு போக்குசொல்வேன் நேரேதான் செம்பதுவும் களஞ்சிநூறு நேர்மையுடன் குகைதனிலே இட்டுமைந்தா தீரேதான் பாகமது பிசகிடாமல் தீர்க்கமுடன் தானுருக்கி மருந்தையீவாடீநு கூரேதான் காரமது விட்டுருக்கி கொற்றவனே குருவொன்று கொடுத்திடாயே |