பண்பான புலிப்பாணி பாருள்ளானே பகருகிறேன் ஞானமென்ற பாலையப்பா நண்பான வேங்கைதனை விட்டிறங்கி நலமுடனே திருப்பாலின் கடலின்மார்க்கம் விண்ணதனில் குளிகையிட்டு யென்பின்னாக விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வண்ணமுடன் பின்தொடர்ந்து வருகவென்று வணக்கமுடன் போகரவர் கூறுவாரே |