போற்றவே புலிப்பாணி புகழுள்ளானே பொங்கமுடன்திருப்பாலின் நடுமையத்தில் ஆற்றவே கிருஷ்ணாவதாரனப்பா அலைகடலில் பள்ளிகொண்ட வம்பலத்தில் நாற்றிசையும் நாதாந்த சித்துதாமும் நடுக்கமுடன் ரிஷிகளெல்லாம் பார்த்திருக்க மேற்புரத்தில் போகரிஷி நாதர்தாமும் மெல்லெனவே வடபாகஞ் சாதிப்பாரே |