| மாண்பான வையகத்தின் மார்க்கம்சொல்வேன் மார்க்கமுடட் முறைபாடு வெவ்வேறாகும் தாண்பான கொக்கதுதான் அன்னமாமோ தாடாண்மை கொண்டதொரு கோழிதானும் ஆண்பான கலாபமென்ற மயில்தானாமோ வப்பனே குன்றின்மணி கெம்பாமோசொல் காண்பான செக்கதுவும் லிங்கமாமோ தாரணியில் முறைபாடு இன்னங்கேளே |