சொல்லவென்றால் நாவில்லை பாவுமில்லை துரைராஜ சுந்தரனே எவர்தான்காண்பர் வல்லதொரு சித்தாதி முனிவர்தாமும் வளம்பெரிய சாத்திரத்தில் மறைத்துவைத்த கல்லான முறைகளெல்லாங் கருக்கள்காட்டி கருவிகரணாதியந்தம் முடிவுண்டாக்கி நல்லதொரு முறைபாடு செடீநுபாடெல்லாம் நாட்டினிலே மாண்பர்களுக் குரைத்திட்டேனே |