கிழக்கான பூமியப்பா நெடுந்தூரந்தான் கிளையான யாறுண்டு சுனைதானுண்டு பழக்கமதாடீநு மாண்பர்களும் போனதில்லை பாங்கான குறும்பருட நாடேயாகும் அழகான பூமியது சொல்லவொண்ணாது வப்பனே கெந்தகந்தான் விளையும்நாடு தழலான செடிமரங்கள் பூண்டுமில்லை தாரணியைக் குளிகைகொண்டு கண்டிட்டேனே |