சித்தான வேங்கையென்ற மனிதசித்து ஜெகதலத்தில் யாரேனுங் கண்டதில்லை பத்தியுள்ள என்தேவர் காலாங்கிநாதர் பாங்கான திரேதாயி னுகத்திலப்பா வெத்தியுடன் கண்டதொரு மகிமைதன்னை வேதாந்த சித்தெனக்கு வெளியிட்டார்காண் எத்திசையும் சித்தர்முனி கண்டதில்லை யெழிலான வதிசயத்தின்கூறுதானே |