ஓதினார் சமாதிமுகம் இருந்தகாலம் வுத்தமனார் காலாங்கி நாதருக்கு ஆதியெனும் பராபரத்தின் ரகசியத்தை வப்பனே காலாங்கிக் கோதினார்காண் நீதியுடன் உபதேசம் பெற்றுமல்லோ நிகட்சியுடன் தெற்குமுகம் திரும்பிவந்தார் பாதிமதி சடையணிந்த தம்பிரான்போல் பரமகுரு ரிஷியொருவர் இருந்திட்டாரே |