அன்றான காலாங்கி நாதர்தாமும் அறிவுடைய சித்துமகாரிஷியாரல்லோ குன்றான பருவதத்தைத் தேடியேதான் குணமான காலாங்கி நாதர்தாமும் சென்றாரே பரசுமகாரிஷியார்பக்கல் செம்பவள ரிஷியாரும் அருகிற்சென்று நின்றாரே நெடுநேரம் முடிகள்சாடீநுத்து நீதியுடன் காலாங்கி பணிந்திட்டாரே |