சென்றுமே சிலகாலம் அங்கிருந்து செம்மலுடன் கிரேதாயினுகத்தில்தானும் குன்றுமலை வணாந்திரங்கள் குகைகள்தேடி கூறான சித்துமுனி யனைத்துங்கண்டு தென்றிசையில் கும்பமுனி மலையுங்கண்டு தேற்றமுடன் காலாங்கி மலையைக்காண வென்றிடவே பிரளயங்கள் வந்தபோது மேன்மையுடன் மலைதனிலே இருந்திட்டாரே |