| கொடுக்கவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கோளாறு தான்சுற்றி மைந்தாகேளு விடுக்கவே காலாங்கிநாதர்தாமும் விட்டகுறை இருந்ததொரு தன்மையாலே படுகளம் போல்பத்தாவ தாரந்தன்னை பாற்கடல்கள் சுற்றிவந்து பான்மைகொண்டார் தொடுகுறிபோல் கலிக்கமகா ரிஷியார்தம்மை தோறாமல் கிரிதனையே கண்டார்தானே |