கூறுவேன் புலிப்பாணி மன்னாகேளு கொற்றவனார் காலாங்கி சொன்னநீதி பேறுடைய வையகத்தின் ஸ்தலங்களெல்லாம் பேர்வகுத்துச் சீர்வகுத்துப் பிரித்துச் சொன்னார் ஆறுதலம் பஞ்சபூத ஸ்தலத்தைக்கண்டு வப்பனே எந்தனுக்கு ஓதினார்காண் மாறுபடா ஸ்தலமகிமை யுந்தனுக்கு மார்க்கமுடன் வகைபிரித்து சொல்வேன்தானே |