| பாரேதான் படிகமாந் தீர்த்தங்கண்டேன் பாங்கான ஜம்புவென்ற தீர்த்தங்கண்டேன் நேரேதான் செந்தாமரை தீர்த்தங்கண்டேன் நெடிதான மனோன்மணியாள் தீர்த்தங்கண்டேன் கூரேதான் மஹேஸ்வரனார் தீர்த்தங்கண்டேன் குறிப்பான மச்சமென்ற தீர்த்தங்கண்டேன் சீரேதான் மானிடவ தீர்த்தங்கண்டேன் சிறப்பான கோபருவ தீர்த்தங்கண்டேனே |