காணவே இன்னம்வெகு தீர்த்தமுண்டு கண்மணியே விலாடமென்ற தீர்த்தங்கண்டேன் பூணவே இரணியனார் தீர்த்தங்கண்டேன் புகழான புஜண்டரிட தீர்த்தங்கண்டேன் வேணபடி திருமாலின் தீர்த்தங்கண்டேன் விருளான கும்பமென்ற தீர்த்தங்கண்டேன் நீணவே காளிங்க தீர்த்தங்கண்டேன் நிஷ்களங்க சொர்ணமென்ற தீர்த்தந்தானே |