முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை மூதுலகில் பாடிவைத்தார் சித்தரெல்லாம் கனியான நவகனியாம் நூல்தானப்பா கருத்துடனே பனிரெண்டு காண்டஞ்சொன்னார் பனியதுதான் சூரியனைக் கண்டாற்போல பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம் துப்புரவாடீநுக் காவியத்துக் கொவ்வாதன்றே |