| உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம் வுத்தமனே பெருநூலிற்காணலாகும் கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும் வித்தகனே மற்றோர்நூல் கண்பதில்லை சண்டமாருதம்போலே பனிரெண்டுகாண்டம் சங்கையற வாயிரத்துக் கொருகாண்டந்தானே |