வணங்கவே இன்னம்வெகு சித்தருண்டு வளமான நாதாந்த ரிஷியாரப்பா இணங்கினேன் ஜமதக்னி முனியாருக்கு எழிலான சரணங்கள் மிகவுஞ்சொன்னேன் சுணங்கமது வாராமல் ரிஷியாருக்கு சுத்தமுடன் அவர்பாதந் தொழுதுபோற்றி மணங்கமழுந் திரணாக்கிய முனிவருக்கு மார்க்கமுடன் அவர்பாதந் தொழுதிட்டேனே |