| தொழுதேனே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தொல்லையெனும் பிறவியது மயக்கறுத்த பழுதுபடா புலிப்பாணி பகர்வேனப்பா பாலகனே இன்னம்வெகு சித்தருண்டு முழுதுமே மூதுலகில் கீர்த்திபெற்ற முனையான வசுவினியாந் தேவருக்கு தொழுதுமே யவர்பாதம் போற்றிபோற்றி தோற்றமுடன் அஞ்சலிகள் பகருவேனே |