பாரேதான் மகுத்துவங்கள் வெளியாச்சென்று பண்புள்ள நாதாக்கள் நீங்களெல்லாம் வேரேதான் கோபமது கொள்ளாமற்றான் வேடிநக்கமுடன் எந்தன்மேல் கிருபைவைத்து சீரேதான் சிறுபாலன் என்னையுந்தான் சிறப்புடனே மனதுவந்து வஞ்சலித்து நேரேதான் என்மீதிற் சினங்கொள்ளாமல் நேர்மையுடன் கொண்டணைத்தல் பாரமாமே |