கொள்ளவே போகரேழாயிரந்தான் கொற்றவனே நெடுங்காலந் தவமிருந்து உள்ளபடி யுடல்பொருள்கள் ஆவியெல்லாம் வுத்தமனே இந்நூலுக்கொப்பிவைத்தேன் கள்ளமிலா சாத்திரமாம் சத்தகாண்டம் கலியுகத்தார் தான்பிழைக்க பாடிவைத்தேன் உள்ளபடி சாபமது இந்நூற்கில்லை வுத்தமனே காண்டமது யேழுதானே |