தளவாயை கண்டாக்கால் சம்சயந்தான்தீரும் சங்கற்பவகற்ப மென்ற சட்டைநீக்கும் தளவாயை கண்டாக்கால் தாயோடே சேர்ப்பார் சச்சிதானந்தத்தின் தன்மைகாண்பார் தளவாயை கண்டாக்கால் சகலசித்துமாகும் தனைவானோடொத்த கள்ளனைந்து நிறமாகும் தளவாயை ஐம்பத்தொன்றில் காணாதப்பா சாங்கமாயரைத்து நீ வாசிமாட்டே |