| பாரப்பா மயூரத்தின் செம்புஒன்று பாங்கான தங்கமொன்று நாகமொன்று சேரப்பா மூன்றுமொன்றாயுருக்கிக்கொண்டு செயலான சூதத்தைபொங்கக்கூட்டி காரப்பா கல்வத்தில் பொடியாடீநுப்பண்ணி கசடற்ற கந்தகத்தைப் பாதிகூட்டு வாரப்பா செருப்படையின் சாற்றாலாட்டி வளமாக கல்லுபோல் வில்லைதட்டே |