ஆமென்ற காந்தமது பலந்தான்பத்து அப்பனேகுன்றிபோல் உடைத்துக்கொண்டு காமென்ற செம்பிலிப்பால் படிதான்நாலு கலரவிட்டு சுருக்கிடுநீ நாலுசாமம் தாமென்ற கல்வத்தில் செம்பிலிப்பால் விட்டுத்தாக்கி அரைநால்சாமம் புடத்தைப்போடு ஆமென்ற பாலாலே யரைத்தரைத்து அப்பனே ஐந்துபுடம் போட்டுத்தீரே |