ஆமப்பா திராவகத்தை சொல்வேனப்பா அப்பனே எருக்கோடு குப்பைமேனி போமப்பா தாழையொடு அறுகுவாழை போரான மத்தையொடு துத்திகள்ளி தாமப்பா தென்னிலையும் நாயுரு நாணல் தயங்காத பிரண்டையொடு முடக்கொத்தானும் சாமப்பா புரசோடு முள்ளங்கத்திப்புல் தயங்காதே காயவைத்துச் சாம்பலாக்கே |