இறக்கியே கல்வத்திற்சேரைப்போட்டு இதமானகுலாமல்லிச் சாற்றாலாட்டி அறக்கியே யுலரவிட்டு ஐந்துநாளாட்டி ஆடுதின்னாப்பாலை சாற்நாலுசாமம் மறுக்கியே சிறுகுட்டித் தக்காளிச்சாறு மைந்தனே யமுரியிலைச் சாற்றாலாட்டு நறக்கியே எருக்கினுட பழுப்புச்சாறு நலமானவகத்தியுட பழுப்புச்சாறே |